/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேதிப்பொருளால் இலங்கை மீனவர்கள் அச்சம் வேதிப்பொருளால் இலங்கை மீனவர்கள் அச்சம்
வேதிப்பொருளால் இலங்கை மீனவர்கள் அச்சம்
வேதிப்பொருளால் இலங்கை மீனவர்கள் அச்சம்
வேதிப்பொருளால் இலங்கை மீனவர்கள் அச்சம்
ADDED : ஜூன் 14, 2025 06:24 AM

ராமநாதபுரம்: இலங்கை மன்னார் மாவட்டத்தில் சவுத்பார் கடற்கரையோரம் 15 கி.மீ.,க்கு கரை ஒதுங்கும் வேதிப்பொருட்களால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகில் கன்டெய்னர்களுடன் கப்பல் கடலில் கவிழ்ந்தது. கப்பலில் இருந்த வேதிப்பொருட்கள் கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல்முனைவரை கடலில் பரவியுள்ளது.
கப்பலில் இருந்த வேதிப்பொருட்கள் இலங்கை மன்னார் மாவட்டம் சவுத்பார் கடற்கரையில் 15 கி.மீ.,க்கு கரை ஒதுங்கியுள்ளது. இதனை இலங்கை கடற்படை, ராணுவம், கடலோர காவல் படையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.