/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மத்திய அரசு ஒப்புதலுக்கு பின்- இலங்கை கப்பல் போக்குவரத்து பணி தமிழக கடல்சார் வாரிய துணை தலைவர் தகவல் மத்திய அரசு ஒப்புதலுக்கு பின்- இலங்கை கப்பல் போக்குவரத்து பணி தமிழக கடல்சார் வாரிய துணை தலைவர் தகவல்
மத்திய அரசு ஒப்புதலுக்கு பின்- இலங்கை கப்பல் போக்குவரத்து பணி தமிழக கடல்சார் வாரிய துணை தலைவர் தகவல்
மத்திய அரசு ஒப்புதலுக்கு பின்- இலங்கை கப்பல் போக்குவரத்து பணி தமிழக கடல்சார் வாரிய துணை தலைவர் தகவல்
மத்திய அரசு ஒப்புதலுக்கு பின்- இலங்கை கப்பல் போக்குவரத்து பணி தமிழக கடல்சார் வாரிய துணை தலைவர் தகவல்
ADDED : ஜூன் 14, 2025 06:24 AM
ராமேஸ்வரம்: மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் ராமேஸ்வரம்- இலங்கை கப்பல் போக்குவரத்துக்கு கட்டுமானப் பணி துவங்கும் என தமிழக கடல்சார் வாரிய துணை தலைவர் டி.என்.வெங்கடேசன் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் புதிய துறைமுக அலுவலக கட்டடம், சுற்றுலா படகிற்கான பாலம் கட்டும் பணியை தமிழக கடல்சார் வாரிய துணைத் தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது :
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிபட்டினம், தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று ஆகிய பகுதிகளை இணைத்து சுற்றுலா படகு சவாரி துவக்க ராமேஸ்வரத்தில் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. மேலும் ராமநாதபுரம் அருகே உள்ள மாங்குரோவ் காடுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் வனத்துறையுடன் இணைந்து சுற்றுலா படகு சவாரி துவக்க வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது.ராமேஸ்வரம் - இலங்கை கப்பல் போக்குவரத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து நிதி வழங்கியதும் அதற்கான கட்டுமானப் பணிகள் துவக்கப்படும் என்றார்.