/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டூவீலர் மீது காட்டுப்பன்றி மோதி கடை உரிமையாளர் பலி டூவீலர் மீது காட்டுப்பன்றி மோதி கடை உரிமையாளர் பலி
டூவீலர் மீது காட்டுப்பன்றி மோதி கடை உரிமையாளர் பலி
டூவீலர் மீது காட்டுப்பன்றி மோதி கடை உரிமையாளர் பலி
டூவீலர் மீது காட்டுப்பன்றி மோதி கடை உரிமையாளர் பலி
ADDED : செப் 20, 2025 10:48 PM

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மண்டலமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டூவீலரில் சென்ற எலக்டரிக் கடை உரிமையாளர் முகமது யாகூப் கனி 40, காட்டுப்பன்றி மோதி கீழே விழுந்து பலியானார்.
கமுதி முஸ்லிம் பஜார் தெருவைச் சேர்ந்த முகமது யாகூப் கனி எலக்ட்ரிக் கடை நடத்தி வந்தார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு கமுதியில் இருந்து அருப்புகோட்டை வழியாக மதுரைக்கு டூவீலரில் சென்றார்.
மண்டலமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குறுக்கே வந்த காட்டுப்பன்றி டூவீலர் மீது வேகமாக மோதியது.
இதில் கீழே விழுந்த முகமது யாகூப் கனி பலியானார். மண்டலமாணிக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று முன்தினம் காட்டுப்பன்றி ஒன்று முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகளை விரட்டியது.
நேற்று காட்டுப்பன்றி மோதி ஒருவர் பலியானார். முதுகுளத்துார், கமுதி பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் தற்போது நகர் பகுதிக்குள்ளும் நுழையத்துவங்கியுள்ளன. இதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டசபையில் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க அரசாணை வெளியிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.