/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பன் கடலில் விழுந்த ரயில் பயணி மீட்பு பாம்பன் கடலில் விழுந்த ரயில் பயணி மீட்பு
பாம்பன் கடலில் விழுந்த ரயில் பயணி மீட்பு
பாம்பன் கடலில் விழுந்த ரயில் பயணி மீட்பு
பாம்பன் கடலில் விழுந்த ரயில் பயணி மீட்பு
ADDED : செப் 20, 2025 08:25 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் ரயில் சென்ற போது, தவறி கடலில் விழுந்த மதுரை பயணி இரவு முழுதும் பாறை மீது நின்றபடி உயிர் தப்பினார்.
மதுரை அருகே பரவையை சேர்ந்த சுப்புராஜ் மகன் வரதராஜன், 28. இவர், நேற்று முன்தினம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மாலை 6:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற ரயிலில் பயணித்துள்ளார்.
மாலை, 6:55 மணிக்கு பாம்பன் பாலத்தில் ரயில் சென்ற போது, ரயில் பெட்டியின் வாசலில் நின்று கடல் அழகை ரசித்து சென்ற வரதராஜன், நிலை தடுமாறி ரயிலில் இருந்து கடலில் விழுந்தார். இவர் கடலில் விழுந்ததை பயணியர் உட்பட யாரும் கவனிக்கவில்லை.
கடலில் விழுந்த வரதராஜன் தத்தளித்து அருகில் இருந்த பாறை மீது ஏறி நின்றார். இரவு முழுதும் பாறை மீது நின்று பரிதவித்துள்ளார். நேற்று காலை நாட்டு படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், மரண பீதியில் பாறை மீது நின்ற வரதராஜனை மீட்டு பாம்பன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரித்து, வரதராஜனை மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.