/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு பதிவு செய்ய செப்.,25 கடைசிநாள் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு பதிவு செய்ய செப்.,25 கடைசிநாள்
குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு பதிவு செய்ய செப்.,25 கடைசிநாள்
குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு பதிவு செய்ய செப்.,25 கடைசிநாள்
குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு பதிவு செய்ய செப்.,25 கடைசிநாள்
ADDED : செப் 20, 2025 11:40 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பள்ளி மாணவர்கள் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தங்களது ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்கலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் லியோன், செயலாளர் காந்தி, மாவட்ட பொருளாளர் பாலமுருகன் கூறியதாவது:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 33 ஆண்டுகளாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. குழந்தைகளின் அறிவியல் மனப்பான்மையையும், ஆய்வு மனப்பான்மையையும் மேம்படுத்தும் விதமாக இந்த மாநாடு நடக்கிறது. இந்த ஆண்டு டிச., முதல் வாரத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் ஆய்வு கட்டுரைகள் மண்டல அளவிலும், மாநில அளவிலும் பங்கேற்க முடியும். இந்த ஆண்டிற்கான மைய கருப்பொருளான நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் நீர் சூழலும் பாதுகாப்பும், நீர் சார்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும், நீர் சார்ந்த நோய்கள், நீர் அனைவருக்குமானது, நீர் பாதுகாப்பான பாரம்பரிய நவீன தொழில்நுட்ப யுத்திகள் என்ற உப தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து வழிகாட்டி ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் உதவியோடு பங்கேற்கலாம்.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 11 முதல் 17 வயது நிரம்பிய பள்ளி மாணவர்கள மேற்கண்ட ஆய்வுகளை செய்வதற்கு அறிவியல் இயக்கத்தின் இணையதளமான www.tnsf.co.in என்ற இணைய தளத்தில் செப்.,25 மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெரோம் 99654 72253, கல்வி ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் 99942 42298 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.