/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2025 11:40 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே குமாரக்குறிச்சி கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால் காலி குடங்களுடன் கருப்பு கொடி ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
குமாரக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் டிராக்டர் தண்ணீரை பிடிப்பதற்காக நாள்தோறும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிகாரிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊராட்சி அலுவலகம் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமமக்கள் கூறியதாவது:
குமாரக்குறிச்சி கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறோம்.குடிநீருக்காக காமாட்சிபுரம், ராமலிங்கபுரம் கிராமங்களுக்கு தள்ளு வண்டியில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் அனைத்தும் காட்சிப்பொருளாகவே உள்ளது.
குடிநீருக்காக டிராக்டர் தண்ணீரை பிடிப்பதற்காக நாள்தோறும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அத்தியாவசிய வேலைக்கு செல்ல முடியவில்லை. கிராமத்தைச் சேர்ந்த பலரும் முதுகுளத்துார் உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு சென்றனர். குடிநீர் வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
புகார் அளித்த அன்று ஒரு நாள் மட்டும் பெயரளவிற்கு இரண்டு மூன்று குடங்கள் மட்டும் தண்ணீர் வருகிறது. பின் மீண்டும் அதே நிலை தொடர்கிறது. எனவே மாவட்ட அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்து நிரந்தரமாக குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.