/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மறுவாழ்வு மையம், மனநல நிறுவனங்கள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் மறுவாழ்வு மையம், மனநல நிறுவனங்கள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்
மறுவாழ்வு மையம், மனநல நிறுவனங்கள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்
மறுவாழ்வு மையம், மனநல நிறுவனங்கள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்
மறுவாழ்வு மையம், மனநல நிறுவனங்கள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்
ADDED : செப் 11, 2025 05:40 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் மறுவாழ்வு மையங்கள், மனநல நிறுவனங்கள் மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறு வாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன் படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் பதிவு செய்ய ஒரு மாத காலத்திற்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் முதன்மை செயல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அலுவலகத்தின் இணையதள முகவரி tnsmha@gmail.com ஆகும். https://tnhealth.tn.in/tngovin/dme/dme.php என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்து ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.