/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம் பரமக்குடியில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்
பரமக்குடியில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்
பரமக்குடியில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்
பரமக்குடியில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்
ADDED : செப் 11, 2025 05:41 AM
பரமக்குடி : பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து பரமக்குடி பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரை செல்லும். ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் மட்டும் பஸ் போக்குவரத்து இருக்கும்.
இந்நிலையில் பரமக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காலை 6:00 மணி முதல் ஒட்டுமொத்தமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.