/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கதர் கிராம தொழில்கள் வாரியத் துறையின் பணிகள்: தலைமை செயல் அலுவலர் ஆய்வு கதர் கிராம தொழில்கள் வாரியத் துறையின் பணிகள்: தலைமை செயல் அலுவலர் ஆய்வு
கதர் கிராம தொழில்கள் வாரியத் துறையின் பணிகள்: தலைமை செயல் அலுவலர் ஆய்வு
கதர் கிராம தொழில்கள் வாரியத் துறையின் பணிகள்: தலைமை செயல் அலுவலர் ஆய்வு
கதர் கிராம தொழில்கள் வாரியத் துறையின் பணிகள்: தலைமை செயல் அலுவலர் ஆய்வு
ADDED : செப் 11, 2025 05:36 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கதர் கிராம தொழில்கள் வாரியத் துறையின் திட்டபணிகளை தலைமை செயல் அலுவலர் சம்பத் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கதர் கிராம தொழில்கள் வாரியத் துறையால் செய்யப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை தலைமை செயல் அலுவலர் சம்பத் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
2023-24ம் நிதியாண்டில் துவக்கப்பட்ட நரிப்பையூர் பனைப் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கதர் கிராம தொழில்கள் வாரியத் துறையின் மூலம் உற்பத்தி பொருட்களான சோப்பு வகைகள், மர சாமான்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.
கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் வகையில் கதர் கிராம பொருட்களை பொதுமக்கள் முழு அளவில் வாங்கி பயன்பெற வேண்டும்.
அதற்கேற்ப அனைத்துத்துறை அலுவலர்கள் பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.
முன்னதாக ராமநாதபுரத்தில் உள்ள கதர் அங்காடி மையம், மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தை கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை தலைமை செயல் அலுவலர் சம்பத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை மண்டல துணை இயக்குநர் பாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை உதவி இயக்குநர்கள் முத்துக்குமார், சீனிவாசன், ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பத்மநாபன், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.