Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் நெடுஞ்சாலைகளில் துாசி மண் பறக்குது மக்கள் அவதி; நிரந்தர தீர்வு காண நடைபாதை அமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் நெடுஞ்சாலைகளில் துாசி மண் பறக்குது மக்கள் அவதி; நிரந்தர தீர்வு காண நடைபாதை அமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் நெடுஞ்சாலைகளில் துாசி மண் பறக்குது மக்கள் அவதி; நிரந்தர தீர்வு காண நடைபாதை அமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் நெடுஞ்சாலைகளில் துாசி மண் பறக்குது மக்கள் அவதி; நிரந்தர தீர்வு காண நடைபாதை அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 02, 2025 07:34 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம், உத்தரகோசமங்கை போன்ற ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வெளியூர்களில் பயணிகள் வந்து செல்கின்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நகரில் மதுரை ரோட்டில் போக்குவரத்து பணிமனை துவங்கி எல்.ஐ.சி., அலுவலகம் வரை ரோட்டோரத்தில் பேவர்பிளாக் கற்கள் பதித்து நடைபாதை அமைத்துள்ளனர்.

ராமநாதபுரம், பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பாரதிநகர், பட்டணம்காத்தான் வரை நடைபாதை அமைக்க வில்லை. இதன் காரணமாக ராமேஸ்வரம், மதுரை, துாத்துக்குடி நெடுஞ்சாலைகளில் மணல் குவிந்து தற்போது பலத்த காற்றில் பறக்கும் துாசி மண்ணால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் மணலை அகற்றி மீண்டும் குவியாத வகையில் பேவர்பிளாக் கற்கள் பதித்து நடைபாதை அமைக்க வேண்டும்.

மேலும் மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ளது போன்று சாலைகளில் உள்ள குப்பை மற்றும் துாசிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும்'ரோட் ஸ்வீப்பர்' இயந்திரம் வாங்க வேண்டும்.அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us