/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கிராமப்புற சுகாதார செவிலியர்கள் அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கிராமப்புற சுகாதார செவிலியர்கள் அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கிராமப்புற சுகாதார செவிலியர்கள் அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கிராமப்புற சுகாதார செவிலியர்கள் அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2025 07:33 AM

ராமநாதபுரம் :கிராமப்புற சுகாதார செவிலியர்கள் குறித்து ஊடகத்தினரிடம் தவறான தகவல்களை தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அதனை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராமப்புற சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் விமலா தலைமை வகித்தார். பரமக்குடி சுகாதார மாவட்டத்தலைவர் சியா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி வரவேற்றார்.
கண்டன ஆர்ப்பாட்டதத்தில் துணை சுகாதார மையங்களில் தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக்கூடாது. துணை சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது.
காலியாகவுள்ள 4000 சுகாதார செவிலியர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கூடுதல் துணை சுகாதார நிலையங்கள் 642 க்கும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். துணை செவிலியர்கள் பணியிடங்கள் ஒப்படைப்பு செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலுயுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
சுகாதாரம் அமைச்சர் சுப்பிரமணியன் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் கொரோனா தடுப்பூசியும், வழக்கமாக ஆற்றும் தடுப்பூசி பணியையும் செய்ய மறுத்ததாக ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அமைச்சர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனகண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.