ADDED : ஜூன் 04, 2025 01:38 AM
ஆர்.எஸ்.மங்கலம்:வேலுாரில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்தவர்களின் கார் விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
வேலுார் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன் 70. ஜவுளிக் கடை உரிமையாளரான இவர் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு காரில் வந்தார். அதனை அவரது மகன் மஞ்சுநாதன் 38, ஓட்டினார்.
நேற்று அதிகாலை 5:30 மணிக்கு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம் விலக்கு பகுதியில் கார் சென்ற போது எதிர்பாராத விதமாக ரோட்டை விட்டு கீழிறங்கி கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த உமா மகேஸ்வரன் பலியானார். மனைவி கவுரி 58, மகன் மஞ்சுநாதன் 38, மருமகள் லதா 23, குழந்தை ரிதன்யா 5, படுகாயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.