/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் ராவணனை வதம் செய்த ஸ்ரீ ராமர் ராமேஸ்வரத்தில் ராவணனை வதம் செய்த ஸ்ரீ ராமர்
ராமேஸ்வரத்தில் ராவணனை வதம் செய்த ஸ்ரீ ராமர்
ராமேஸ்வரத்தில் ராவணனை வதம் செய்த ஸ்ரீ ராமர்
ராமேஸ்வரத்தில் ராவணனை வதம் செய்த ஸ்ரீ ராமர்
ADDED : ஜூன் 04, 2025 02:17 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி ஸ்ரீ ராமர், ராவணனை வதம் செய்தார்.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் கோயிலில் தல வரலாற்றை பக்தர்களுக்கு நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கும். அதன்படி நேற்று ராமேஸ்வரம் கோயிலில் இந்த விழா துவங்கியது.
மாலை கோயிலில் இருந்து ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், ஹனுமனுடன் பல்லக்கில் புறப்பாடாகி திட்டக்குடியில் எழுந்தருளினர். பின் அங்கிருந்த ராவணனை , அம்பு எய்து ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் உதயகுமார் நடத்தினார். பின் ராமர், சீதை, லட்சுமணர், ஹனுமனுக்கு மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதனால் இன்று காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும்.