/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கார் ஏற்றியவர் மீது பாய்ந்தது குண்டாஸ் கார் ஏற்றியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கார் ஏற்றியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கார் ஏற்றியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கார் ஏற்றியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
ADDED : ஜூன் 04, 2025 02:29 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே அம்மன் கோயில் பகுதியில் கடந்த மாதம் வாலிபர் ஒருவர் மது போதையில் காரை ஏற்றி 12 பேரை கொல்ல முன்ற சம்பவத்தில் இருவர் பலியாகினர்.
இதுதொடர்பாக பரமக்குடி பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் ராமநாத பிரபு 25 , என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையை ஏற்று கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். குண்டாசில் கைதான ராமநாதபிரபு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.