Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேசிய மக்கள் நீதிமன்றம்: 1062 வழக்குகளில்  ரூ.5.33 கோடி வழக்காளர்களுக்கு வழங்கல் 

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1062 வழக்குகளில்  ரூ.5.33 கோடி வழக்காளர்களுக்கு வழங்கல் 

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1062 வழக்குகளில்  ரூ.5.33 கோடி வழக்காளர்களுக்கு வழங்கல் 

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1062 வழக்குகளில்  ரூ.5.33 கோடி வழக்காளர்களுக்கு வழங்கல் 

ADDED : ஜூன் 14, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசியமக்கள் நீதிமன்றத்தில் 1062 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.5.33 கோடி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாநிலசட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தர வின் படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதிமெஹபூப் அலிகான் தலைமை வகித்தார்.

ராமநாதபுரம் சட்டப்பணிகள்ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்துார்,கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம் நீதிமன்றங்களில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டு அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளசிவில், கிரிமினல், வாகன விபத்து, செக் மோசடி, வங்கி வாராக்கடன், சிறு வழக்குகள் உட்பட 5023 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.

இதில் விரைவு மகிளா நீதிபதி கே.கவிதா, தலைமை குற்றவியல் நடுவர் சி.மோகன்ராம், சார்பு நீதிபதி எம்.அகிலாதேவி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆர்.சரவணபாபு, நீதித்துறை நடுவர் எண் 1என்.நிலவேஸ்வரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.கேத்திரினி ஜெபாசகுந்தலா, வழக்கறிஞர் சங்கத்தலைவர் அன்பு செழியன், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

இதில் 1062 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுவழங்காளர்களுக்கு ரூ.5.33 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

* திருவாடானை நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் நடந்தது. திருவாடானை நீதிபதி அன்டோனி ரிஷந்தேவ் தலைமையில் நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் இரு தரப்பும் சமரசத்துக்கு தயாராக உள்ள வழக்குகள் என 356 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 193 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்து 705 தீர்வு தொகை வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த கணவன், மனைவி சேர்ந்து வாழ அறிவுரை வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us