/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா
புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா
புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா
புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா
ADDED : ஜூன் 14, 2025 11:44 PM

கமுதி: கமுதி புனித அந்தோணியார் சர்ச் தேர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தது.
கமுதி மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் சர்ச் 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
தினமும் திருப்பலி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி முன்னாள் பாதிரியார் ரெய்மண்ட் ஜோசப் தலைமை வகித்தார். கமுதி பங்குத்தந்தை அம்புரோஸ் லுாயிஸ், கே.எம்.கோட்டை பாதிரியார் சார்லஸ் முன்னிலை வகித்தனர். அந்தோணியார், ஜெபஸ்தியார், மிக்கேல் சம்மனசு, சவேரியார் தேர் மின்னொளி அலங்காரத்தில் சர்ச்சில் இருந்து நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் உட்பட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.
அங்குள்ள பொதுமக்கள் அனைத்து மதத்தினரும் மெழுகுவர்த்தி ஏற்றி அந்தோணியாரை வணங்கினர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரத உறவின் முறையினர் செய்தனர்.