ADDED : ஜூன் 14, 2025 11:43 PM
சிக்கல்: சிக்கல் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் கிணறு 160 அடி ஆழம் கொண்டது. அதில் எதிர்பாராமல் பூனை ஒன்று விழுந்து விட்டது.
இது குறித்து சாயல்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி பூனையை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.