/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/முதலீட்டை எடுக்க முடியாமல் வியாபாரிகள் பாதிப்பு : கருவாடு விலை உயர்வால் விற்பனை 'டல்'முதலீட்டை எடுக்க முடியாமல் வியாபாரிகள் பாதிப்பு : கருவாடு விலை உயர்வால் விற்பனை 'டல்'
முதலீட்டை எடுக்க முடியாமல் வியாபாரிகள் பாதிப்பு : கருவாடு விலை உயர்வால் விற்பனை 'டல்'
முதலீட்டை எடுக்க முடியாமல் வியாபாரிகள் பாதிப்பு : கருவாடு விலை உயர்வால் விற்பனை 'டல்'
முதலீட்டை எடுக்க முடியாமல் வியாபாரிகள் பாதிப்பு : கருவாடு விலை உயர்வால் விற்பனை 'டல்'
ADDED : ஜூன் 13, 2025 11:28 PM

ராமநாதபுரம்: மீன்பிடி தடை காலம் காரணமாக ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் இருந்து கருவாடு வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் விலை கிலோவிற்கு ரூ.50 வரை உயர்ந்தபோதும்வழக்கமான விற்பனை இன்றி முதலீட்டை எடுக்க முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால் ஆகிய இடங்களில் இருந்து மீன்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதிகளில் கடலோரத்தில் மீன்களை காயவைத்து கருவாடாக வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
தற்போது மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்.,15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்வது இல்லை. நாட்டுப்படகுகளில் சிலர் மீன்பிடிக்கின்றனர். இதன் காரணமாக தங்கச்சி மடம், பாம்பன், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களிலிருந்து கருவாடு வரத்து குறைந்துள்ளது. அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
உள்ளூரில் கிடைக்காததால் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலிருந்து நெத்திலி மீன் கருவாடு வாங்கி வந்து ராமநாதபுரத்தில் விற்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.250க்கு விற்ற நெத்திலி மீன் கருவாடு தற்போது கிலோ ரூ.350 வரையும், இதுபோன்று காரா, நகரை, பன்னா, திருக்கை உள்ளிட்ட கருவாடுகள் கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது.
வண்டி வாடகை, ஏற்றுக்கூலி, இறக்குகூலி போக முதலீட்டை எடுப்பது சிரமமாக உள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ளதால் அடுத்த வாரங்களில் கருவாடு விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.