/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாம்பழத்திற்கு விலையில்லை ரோட்டில் கொட்டும் அவலம் மாம்பழத்திற்கு விலையில்லை ரோட்டில் கொட்டும் அவலம்
மாம்பழத்திற்கு விலையில்லை ரோட்டில் கொட்டும் அவலம்
மாம்பழத்திற்கு விலையில்லை ரோட்டில் கொட்டும் அவலம்
மாம்பழத்திற்கு விலையில்லை ரோட்டில் கொட்டும் அவலம்
ADDED : ஜூன் 13, 2025 11:27 PM

ராமநாதபுரம்,: சீசனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த விற்பனையின்றி இருப்பு வைத்தாலும் பலனில்லை என பழங்களை வியாபாரிகள் ரோட்டில் கொட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம், ரெகுநாதபுரம், சக்கரைகோட்டை, பெரியபட்டினம், பட்டணம்காத்தான், தேவிபட்டினம், கீழக்கரை ரோடு, திருப்புல்லாணி உள்ளிட்ட இடங்களில் மா சாகுபடி செய்துள்ளனர். ஏப்., மே, ஜூன் வரை மா சீசன் உள்ளது. கடந்த ஏப்.,ல் மாம்பழம் கிலோ ரூ.50 முதல் ரூ.80 தரத்திற்கு ஏற்ப விற்கப்பட்டது.
தற்போது உள்ளூர் மட்டுமின்றி மதுரை, தேனி , திண்டுக்கல் மாம்பழங்களும் விற்பனைக்கு வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தற்போது சீசனை முன்னிட்டு மேற்கண்ட இடங்களில் மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இவற்றை சந்தையில் கிலோ ரூ.20 முதல் ரூ.40க்கும் விற்கப்படுகிறது. அதாவது பாலாமணி 4 கிலோ ரூ.100, கசாலட்டு 3 கிலோ ரூ.100, சப்போட்டா 2.5 கிலோ ரூ.100க்கு விற்கின்றனர். வரத்து அதிகரித்துள்ள போதும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை. இருப்பு வைத்தாலும் பலனில்லை என்பதால் சிலர் பழங்களை ரோட்டில் கொட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.