Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வெளிநாட்டில் இறந்த தொழிலாளி  உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

வெளிநாட்டில் இறந்த தொழிலாளி  உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

வெளிநாட்டில் இறந்த தொழிலாளி  உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

வெளிநாட்டில் இறந்த தொழிலாளி  உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

ADDED : ஜூன் 13, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை ஊராட்சி குலசேகரக்கால் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் 42. இவர் 25 ஆண்டுகளாக ஓமன் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். ஜூன் 11ல் அங்கு தற்கொலை செய்து கொண்டார் என உறவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக ராமன் மனைவி இந்திராவின் சகோதரர் முதுகுளத்துார் தாலுகா விளங்குளத்துாரைச் சேர்ந்த முனியசாமி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அதில் இரண்டு நாட்களில் விடுமுறையில் ஊருக்கு வருவதாக கூறி இருந்த நிலையில் ஜூன் 11ல் ராமன் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்து அவரது உடலை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். அதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us