/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கார் -- லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி; நால்வர் படுகாயம் கார் -- லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி; நால்வர் படுகாயம்
கார் -- லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி; நால்வர் படுகாயம்
கார் -- லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி; நால்வர் படுகாயம்
கார் -- லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி; நால்வர் படுகாயம்
ADDED : செப் 01, 2025 05:58 AM

பரமக்குடி: கார் -- லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியாகினர்; நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம், செட்டிய தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 71; பவுண்டு தெருவில் அரிசி கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி ஜமுனா, 63, மகள் ரூபினி, 35, மகன் சரண்ராஜ், 30, ஆகியோர் வாடகை காரில், ராமநாதபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு குற்றாலம் சென்று கொண்டிருந்தனர். காரை மணக்குடியை சேர்ந்த டிரைவர் காளீஸ்வரன், 28, ஓட்டினார்.
மதுரையில் இருந்து நாகநாதன், 47, ஜெயமாலா, 44, ஆகியோர் வீட்டை காலி செய்து பொருட்களை ஏற்றி, மினி லாரியில் ராமநாதபுரம் நோக்கி வந்தனர். லாரியை டிரைவர் முத்துராஜா, 23, ஓட்டினார்.
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இருந்து, நென்மேனி அருகே வந்தபோது, ராமநாதபுரம் இருவழி சாலையில் இருந்து வந்த கார், லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில், ஜமுனா, ரூபினி, கார் டிரைவர் காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தராஜும் இறந்தார்.
லாரி டிரைவர் முத்துராஜா, நாகநாதன், ஜெயமாலா, சரண்ராஜ் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரமக்குடி தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.