ADDED : ஜூன் 26, 2025 12:59 AM
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே ஆய்ங்குடி, திருத்தேர்வலை, பனிக்கோட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டது. இரண்டு நாட்களாக ஏற்பட்ட மின்தடை சரி செய்யப்படாததால் கிராம மக்கள் பாதிப்படைந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைத்து நேற்று மின்சாரம் வழங்கினர்.
இதனால் பாதிக்கப்பட்ட கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.