/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கொளுத்தும் வெயில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு கொளுத்தும் வெயில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
கொளுத்தும் வெயில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
கொளுத்தும் வெயில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
கொளுத்தும் வெயில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஜூன் 26, 2025 12:59 AM

கீழக்கரை: கீழக்கரை அருகே ஆனைகுடி, காஞ்சிரங்குடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
தற்போது கொளுத்தும் கோடை வெயிலால் பாத்திகளில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் வெயிலின் தாக்கம் குறைந்த நேரங்களில் உப்பு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் விளைவிக்கப்படும் உப்பு உரிய முறையில் அயோடின் சேர்க்கப்பட்டு உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இதர உப்புகள் உரத்தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்சாலை உள்ளிட்ட உப்பு தேவை உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஒரு டன் உப்பு ரூ.3000 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
மழை காலங்களில் இதன் விலை உயர்வு அதிகமாக காணப்படும்.
கோடை மழை காலங்களில் உப்பள பாத்திகளில் உப்பு கரைவதை தடுக்க தார்ப்பாய் மற்றும் தென்னை ஓலையால் பாதுகாத்து வந்தனர்.
பாத்திகளின் கரைப்பகுதியில் உப்பு குவிக்கப்பட்டு உரிய முறையில் சரக்கு வாகனங்களில் துாத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.