/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முகநுாலில் அவதுாறு பதிவிட்டவர் மீது வழக்கு முகநுாலில் அவதுாறு பதிவிட்டவர் மீது வழக்கு
முகநுாலில் அவதுாறு பதிவிட்டவர் மீது வழக்கு
முகநுாலில் அவதுாறு பதிவிட்டவர் மீது வழக்கு
முகநுாலில் அவதுாறு பதிவிட்டவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 14, 2025 06:13 AM
ராமநாதபுரம்: -முகநுாலில் அவதுாறு கருத்து பதிவிட்டவர் மீது ராமநாதபுரம்சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
தேவிபட்டினம் படையாட்சி தெருவை சேர்ந்தவர் கிரிதரன் திருநாவு. இவர் தனது முகநுால் பக்கத்தில் முஸ்லிம்கள் வணங்குவது பற்றி அவதுாறான கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
இது குறித்து தேசிய லீக் கட்சியின் மாவட்டத் தலைவர் தேவிபட்டினம் சின்ன பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கிரிதரன் திருநாவு மீது வழக்குப்பதிந்துள்ளார்.