ADDED : செப் 09, 2025 03:57 AM

ராமநாதபுரம்: மண்டபம் ஊராட்சி ஒன்றியம் கும்பரம் பகுதியில் விமான நிலையம் அமைக்கும் முயற்சியை கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மயில்வாகனன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கும்பரம், கல்கிணற்றுவலசை, மணியக்காரவலசை, படைவெட்டிவலசை, ராமன் வலசை, தெற்குவாணி வீதி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.