/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2025 03:57 AM
ராமநாதபுரம்: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை அவசர கதியில் அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் நம்புராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி கூறியதாவது:
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை மீறி அவசரகதியில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் செயல்படுத்த முயல்வதை கைவிட வேண்டும்.
இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மது விற்பனையின் போது பணமாக பெறுவதற்கு பதில் ஆன்லைன் மூலம் பணம் பெறுவதை அதிகரிக்குமாறு நிர்பந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே கடையில் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சந்தானம், மாவட்ட செயலாளர் சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.