/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகிறது காவிரி குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகிறது காவிரி குடிநீர்
குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகிறது காவிரி குடிநீர்
குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகிறது காவிரி குடிநீர்
குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகிறது காவிரி குடிநீர்
ADDED : செப் 09, 2025 03:56 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் சரிவர பராமரிக்கப்படாமல் குழாய் சேதமடைந்து குடிநீர் ஒரு மாதமாக வீணாகிறது. சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 65 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 2011ம் ஆண்டில் திருச்சி நங்கநல்லுார் பகுதி காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் ராமநாதபுரத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த தண்ணீர் கீழ்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி மேல் நிலைத் தொட்டி, லேத்தம்ஸ் மேல்நிலைத் தொட்டி, பஸ்ஸ்டாண்ட் மேல்நிலைத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு நகராட்சி பகுதிகளில் தினமும் 33 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் குழாய் சரிவர பராமரிக்கப்படாமல் குடிநீர் வீணாவது வாடிக்கையாகியுள்ளது.
குறிப்பாக ராஜா பள்ளி மைதானம் உள்ள ராமநாதபுரம் - மதுரை ரோட்டில் உணவகம் அருகே குழாய் சேதமடைந்து காவிரி குடிநீர் ஒரு மாதத்திற்கு மேலாக வீணாகி வருகிறது.
எனவே உடனடியாக சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக் கள் வலியுறுத்தினர்.