Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம்

ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம்

ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம்

ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம்

ADDED : செப் 11, 2025 10:47 PM


Google News
ராமநாதபுரம்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஆதிதிராவிடர், பழங்குடியின சார்ந்தவராக இருக்க வேண்டும்.

பி.எஸ்.சி., நர்சிங், பொது நர்சிங், ஜி.என்.எம். டிப்ளமோ, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பி.டெக்., தகவல் தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒன்பது மாதம் பயிற்சி அளிக்கப்படும். விடுதி கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும். தகுதியானவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் ஜெர்மனியில் வேலை வழங்கப்படும்.

ஆரம்பகால மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us