/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கட்சியினர் அஞ்சலி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கட்சியினர் அஞ்சலி
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கட்சியினர் அஞ்சலி
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கட்சியினர் அஞ்சலி
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கட்சியினர் அஞ்சலி
ADDED : செப் 11, 2025 10:47 PM
பரமக்குடி; பரமக்குடியில் நேற்று இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை 8:00 மணி முதல் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்தனர். இமானுவேல் சேகரன் பிறந்த ஊரான செல்லுார் கிராம மக்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் ரமேஷ்குமார், சக்கரவர்த்தி, கோமகன், ஜுவான் உட்பட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ராமச்சந்திரன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மாவட்ட செயலாளர் தர்மர் எம்.பி., தலைமையில் அஞ்சலி செலுத்தினர். போகலுார் ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் நாகநாதன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், ராஜலட்சுமி, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர்கள் பாலகணபதி, கருப்பு முருகானந்தம், பட்டியலணி மாநில செயலாளர் பிரபு, ஊடகப்பிரிவு மாநில செயலாளர் குரு, காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை, மாவட்ட பொறுப்பாளர் ராஜாராம் பாண்டியன், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாநில பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன், வி.சி.க., துணை பொது செயலாளர் வன்னியரசு, பா.ம.க., மாநில பொருளாளர் செய்யது மன்சூர் உசேன், அனைத்து கட்சி முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள் உள்ளிட்ட கட்சியினர், சமூக அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 7000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
பரமக்குடியில் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. கிராம மக்கள் முளைப்பாரி எடுத்தும், மொட்டை அடித்தும் குடும்பத்துடன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.