/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரத்தில் அலுவலர்களின்றி வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள் ராமநாதபுரத்தில் அலுவலர்களின்றி வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்
ராமநாதபுரத்தில் அலுவலர்களின்றி வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்
ராமநாதபுரத்தில் அலுவலர்களின்றி வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்
ராமநாதபுரத்தில் அலுவலர்களின்றி வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்
ADDED : செப் 11, 2025 10:47 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அனைத்து அலுவலர்களும் தற்செயல் விடுப்பில் சென்றதால் அலுவலகம் வெறிச்சோடியது
தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் சி.பி.எஸ்., திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் சி.பி.எஸ்., ஒழிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி 2026 ஜன., காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன் முன்னோட்டமாக செப்.,11ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தப்படும் என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் அறிவித்தது. அரசு ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பதை தவிர்த்து அனைவரும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று அனைத்து அலுவலர்களும் தற்செயல் விடுப்பு எடுத்ததால் அலுவலகம் வெறிச்சோடியது.