/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாலிபால் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு வாலிபால் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு
வாலிபால் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு
வாலிபால் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு
வாலிபால் கோடை கால பயிற்சி முகாம் நிறைவு
ADDED : ஜூன் 07, 2024 11:04 PM
பரமக்குடி : பரமக்குடி ஆர்.எஸ்.வாலிபால் கழகம் சார்பில் ஒரு மாத கோடைகால பயிற்சி முகாம் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மே 5ல் துவங்கி ஜூன் 5 வரை ஒரு மாதம் நடந்தது. இதில் 125 மாணவர்கள் காலை, மாலை என பயிற்சி பெற்றனர்.
பயிற்சியாளர்களாக உடற்கல்வி இயக்குனர் ராஜா, உதவி பயிற்சியாளர் கார்த்திக் உள்ளிட்ட ஆசிரியர்கள் இருந்தனர். நிறைவு விழாவில் சேர்மன் சண்முகம், தலைவர் காந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மப்பிரியா முன்னிலை வகித்தனர்.
பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் வாலிபால் கழக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.