Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளி மாணவி பாலியல் பலாத்கார  வழக்கு  ஜூன் 21 க்கு தள்ளி வைப்பு 

பள்ளி மாணவி பாலியல் பலாத்கார  வழக்கு  ஜூன் 21 க்கு தள்ளி வைப்பு 

பள்ளி மாணவி பாலியல் பலாத்கார  வழக்கு  ஜூன் 21 க்கு தள்ளி வைப்பு 

பள்ளி மாணவி பாலியல் பலாத்கார  வழக்கு  ஜூன் 21 க்கு தள்ளி வைப்பு 

ADDED : ஜூன் 07, 2024 11:04 PM


Google News
ராமநாதபுரம் : பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணை ஜூன் 21 க்கு தள்ளி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும் அ.தி.மு.க முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

சிகாமணிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கீதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி இளங்கோவன் சிகாமணிக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட அன்னலட்சுமி உமா மற்றும் கயல்விழி ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமின் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிகாமணி உள்பட 5 பேரும் ஆஜர் ஆகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை ஜூன் 21க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us