/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அமைப்பு சாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம் அமைப்பு சாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 16, 2024 11:51 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி வாசுதேவன், தையல் தொழிலாளர் சங்க நிர்வாகி ஞானசேகர், கைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகி முரளி, தனியார் மோட்டார் சங்க நிர்வாகி மணிக்கண்ணு, சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகி சுடலைகாசி, ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகி பாஸ்கரன், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து விஜயன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார்.
சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகிகள் குருவேல், அய்யாத்துரை, செந்தில், பச்சம்மாள், தனுஷ்கோடி, ஆனந்த் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காணாமல் போன தொழிலாளர்களின் 72 லட்சம் தரவுகளை மீட்டெடுக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்களை அதிகரித்து வழங்க வேண்டும்.
பென்ஷன் ரூ.3000 வழங்க வேண்டும். ஆன் லைன் அபராதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.