/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரூ.99.75 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய கட்டடங்கள் திறப்பு விழா ரூ.99.75 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய கட்டடங்கள் திறப்பு விழா
ரூ.99.75 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய கட்டடங்கள் திறப்பு விழா
ரூ.99.75 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய கட்டடங்கள் திறப்பு விழா
ரூ.99.75 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய கட்டடங்கள் திறப்பு விழா
ADDED : ஜூலை 16, 2024 11:52 PM
திருவாடானை : திருவாடானை அருகே ரூ.99.75 லட்சத்தில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி உட்பட ஆறு புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
திருவாடானை ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டை சேர்ந்த கூகுடி கிராமத்தில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.26.75 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டடம், ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட சமையலறை, நெடுமரம் கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை.
கட்டவிளாகத்தில் ரூ.43 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம், அதே கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை, ரூ.8 லட்சத்தில் அங்கன்வாடி ஆகிய கட்டடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் திறந்து வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார், பி.டி.ஓ., கணேசன், பி.டி.ஓ., (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ராஜா, கூகுடி ஊராட்சி தலைவர் சரவணன், கட்டவிளாகம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.