ADDED : ஜூலை 16, 2024 11:51 PM

திருவாடானை : திருவாடானை பகுதியில் செங்கல் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கட்டடப் பணிகளுக்கு முக்கிய தேவையாக இருப்பது செங்கல். சுடப்படாத செங்கற்களை அடுக்கி அவற்றுக்கு இடையில் விறகு, நெல் உமி போன்றவற்றை வைத்து நெருப்பு பற்றவைப்பதன் மூலம் ஏற்படும் வெப்பத்தில் செங்கல் சுடப்படுகிறது. திருவாடானை பகுதியில் கடம்பூர், மங்களக்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் செங்கல் தயாரிப்பு பணி நடக்கிறது.
இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், அடுக்கி வைக்கப்பட்ட செங்கல் அடியிலும், மேற்பகுதியிலும் விறகுகளை பயன்படுத்தி தீ மூட்டுவோம்.
ஒரு வாரத்திற்கு பிறகு அவற்றை பிரித்து விற்பனை செய்வோம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான கிராமங்களில் செங்கல் தயாரிப்பு பணிகள் நடந்தது.
நாளடைவில் செங்கலுக்கு பதில் கான்கிரீட் சாலிட் பிளாக் கல் அறிமுகம் ஆனதால் செங்கல் விற்பனை மந்தமடைந்தது.
இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். திருவாடானை பகுதியில் ஆங்காங்கே சில கிராமங்களில் மட்டும் செங்கல் தயாரிப்பு பணிகள் நடக்கிறது.
ஒரு செங்கல் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.