Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொண்டியில் படகு சவாரி சுற்றுலா பயணியர் உற்சாகம்

தொண்டியில் படகு சவாரி சுற்றுலா பயணியர் உற்சாகம்

தொண்டியில் படகு சவாரி சுற்றுலா பயணியர் உற்சாகம்

தொண்டியில் படகு சவாரி சுற்றுலா பயணியர் உற்சாகம்

ADDED : ஜூன் 19, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
திருவாடானை:தொடர் விடுமுறையால் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காட்டில் சுற்றுலாப் பயணியர் படகு சவாரி சென்றனர். காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.

இயற்கை தந்த கொடையாக அனைவரது மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான பயணியர் வருகின்றனர்.

அவர்களை கடலுக்குள் அழைத்துச் சென்று சுற்றி காட்ட வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்புச் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலையாத்தி காடுகளுக்கு நடுவில் செல்லும் போது ஏராளமான பறவைகளை கண்டு ரசிக்கலாம்.

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமானோர் குவிகின்றனர். மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணியர் இங்கு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us