/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 'சஸ்பெண்ட்' ஆன தாசில்தார் வீட்டில் 50 பவுன், ரூ.75 ஆயிரம் கொள்ளை 'கேமரா ஹார்ட் டிஸ்க்' கை விட்டு வைக்கவில்லை 'சஸ்பெண்ட்' ஆன தாசில்தார் வீட்டில் 50 பவுன், ரூ.75 ஆயிரம் கொள்ளை 'கேமரா ஹார்ட் டிஸ்க்' கை விட்டு வைக்கவில்லை
'சஸ்பெண்ட்' ஆன தாசில்தார் வீட்டில் 50 பவுன், ரூ.75 ஆயிரம் கொள்ளை 'கேமரா ஹார்ட் டிஸ்க்' கை விட்டு வைக்கவில்லை
'சஸ்பெண்ட்' ஆன தாசில்தார் வீட்டில் 50 பவுன், ரூ.75 ஆயிரம் கொள்ளை 'கேமரா ஹார்ட் டிஸ்க்' கை விட்டு வைக்கவில்லை
'சஸ்பெண்ட்' ஆன தாசில்தார் வீட்டில் 50 பவுன், ரூ.75 ஆயிரம் கொள்ளை 'கேமரா ஹார்ட் டிஸ்க்' கை விட்டு வைக்கவில்லை
ADDED : ஜூன் 19, 2024 02:02 AM

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு நில அபகரிப்பு வழக்கில் சஸ்பெண்ட் ஆன மண்டல துணை தாசில்தார் மோகன்ராம் 48, வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 50 பவுன் நகைகள், ரூ.75 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.
பெரியகுளம் தென்கரை பாரதிநகரைச் சேர்ந்த மோகன்ராம் சில ஆண்டுகளுக்கு முன் மண்டல துணை தாசில்தாராக பணிபுரிந்த போது வடவீரன்நாயக்கன்பட்டி அரசு நில அபகரிப்பு வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவர் நான்கு நாட்களுக்கு முன் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான நெக்லஸ், வளையல்கள், செயின்கள் உள்ளிட்ட 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் இதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமரன் வீட்டின் கதவு, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் பொருட்கள் திருடு போகவில்லை. மோகன்ராம் வீட்டில் விரல்ரேகை பதிவு எஸ்.ஐ., வீரமணி தடயங்களை சேகரித்தார்.
ஹார்ட் டிஸ்க்கும் திருட்டு
மோகன்ராம் வீட்டில் இரு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், எஸ்.ஐ., அழகுராஜா கேமராக்களை ஆய்வு செய்த போது தடயங்களை மறைக்க கேமரா 'புட்டேஜ் பதிவு செய்யும் 'ஹார்ட் டிஸ்க்குளையும்' கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரிந்தது. மற்ற வீடுகளிலுள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.