/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டூவீலர்கள் திருட்டு 3 வாலிபர்கள் கைது டூவீலர்கள் திருட்டு 3 வாலிபர்கள் கைது
டூவீலர்கள் திருட்டு 3 வாலிபர்கள் கைது
டூவீலர்கள் திருட்டு 3 வாலிபர்கள் கைது
டூவீலர்கள் திருட்டு 3 வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 18, 2024 06:42 AM
கீழக்கரை : கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் டூவீலர்கள் தொடர்ந்து திருட்டு போனது. கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தொண்டி உடையார் தெருவை சேர்ந்த முகமது வாசிம் 21, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் 25, எஸ்.பி.பட்டினம் கிழக்கு தெரு முகமது முஸ்தபா 19, ஆகியோர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மூன்று வாலிபர்களையும் ஏர்வாடியில் தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடமிருந்து 7 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.