Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராணுவ வீரர் பழனிக்கு அரசு நினைவு மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

ராணுவ வீரர் பழனிக்கு அரசு நினைவு மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

ராணுவ வீரர் பழனிக்கு அரசு நினைவு மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

ராணுவ வீரர் பழனிக்கு அரசு நினைவு மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 18, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் : இந்திய-சீனா போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனிக்கு தமிழக அரசு சார்பில் ராமநாதபுரத்தில் நினைவு மணிமண்டபம் அல்லது ஸ்துாபி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2020 ஜூன் 16ல் இந்திய- சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே நடந்த எல்லை பிரச்னையில் ராமநாதபுரம் மாவட்ட ராணுவ ஹவில்தார் வீர் சக்ரா பழனி வீரமரணம் அடைந்தார். அவரது நான்காம் ஆண்டு நினைவு நாள் ராமநாதபுரம் அருகே கழுவூருணி கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ராணுவீரர் பழனி உருவ படத்திற்கு அவரது மனைவி வானதி தேவி, குழந்தைகள் பிரசன்னா, திவ்யா, அவரது பெற்றோர் நாச்சியப்பன், புஷ்பவள்ளி ஆகியோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கழுவூருணி கிராமம், ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரத்ததான முகாம், மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. பெருங்குளத்தில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் மருத்துவமனைக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் சுந்தரம், புரவலர் உலகராஜ், கழுவூருணி கிராம தலைவர் காமாட்சி, செயற்குழு உறுப்பினர் துரைப்பாண்டி,சமயபுரம் கோயில் குருக்கள் கிருட்டிணன், ரெட் கிராஸ் பொருளாளர் குணசேகரன், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் கோபிநாத்.

பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கண்ணன், செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியை செல்வலெட்சுமி, மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், இணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

போரில் வீரமரணமடைந்த பழனியின் வீரத்தையும்,தேச பற்றையும் நினைவு கூறும் வகையில் இந்த நான்காவது ஆண்டிலாவது ஒரு நினைவு மண்டபம் அல்லது நினைவு ஸ்துாபியை தமிழக அரசு கட்டித் தரவேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us