/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவெற்றியூருக்கு திசைமாறி செல்வதை தவிர்க்க வழிகாட்டும் போர்டு தேவை திருவெற்றியூருக்கு திசைமாறி செல்வதை தவிர்க்க வழிகாட்டும் போர்டு தேவை
திருவெற்றியூருக்கு திசைமாறி செல்வதை தவிர்க்க வழிகாட்டும் போர்டு தேவை
திருவெற்றியூருக்கு திசைமாறி செல்வதை தவிர்க்க வழிகாட்டும் போர்டு தேவை
திருவெற்றியூருக்கு திசைமாறி செல்வதை தவிர்க்க வழிகாட்டும் போர்டு தேவை
ADDED : ஜூலை 16, 2024 11:44 PM
திருவாடானை: திருவெற்றியூர் செல்லும் பக்தர்கள் திசைமாறி செல்லமால் இருக்க வழிகாட்டும் போர்டுகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களிலும், சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.
இக்கோயிலில் முதல் நாள் இரவு தங்கியிருந்து மறுநாள் தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் பக்தர்கள் தங்கும் வகையில் மண்டபம் உள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற பல வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வருவார்கள்.
திருவாடானையிலிருந்து 10 கி.மீ.,ல் உள்ள இக்கோயிலுக்கு ஆதியூர், அரும்பூர், குளத்துார் வழியாக திருவெற்றியூர் செல்ல வேண்டும். அவ்வாறு பாதாயத்திரையாகவும், வாகனங்களில் செல்பவர்கள் இடது புறமாக செல்லும் ரோட்டில் செல்ல வேண்டும்.
ஆனால் ஏழுர் மற்றும் கொட்டகுடிக்கு நேரே ரோடு செல்வதால் அந்த இடத்தில் எந்த பக்கமாக செல்வது என வழி தெரியாமல் திணறுகின்றனர். ஆகவே அந்த வளைவான இடங்களில் திருவெற்றியூர் செல்வதற்கான வழிகாட்டும் போர்டுகளை வைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.