/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருப்புல்லாணி விலக்கில் செயல்படாத சோதனை சாவடி திருப்புல்லாணி விலக்கில் செயல்படாத சோதனை சாவடி
திருப்புல்லாணி விலக்கில் செயல்படாத சோதனை சாவடி
திருப்புல்லாணி விலக்கில் செயல்படாத சோதனை சாவடி
திருப்புல்லாணி விலக்கில் செயல்படாத சோதனை சாவடி
ADDED : ஜூலை 16, 2024 05:57 AM

ராமநாதபுரம், : -ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி விலக்கில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளதால்விபத்துக்கள், குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி செல்லும் கிழக்கு கடற்கரை ரோட்டில் திருப்புல்லாணி விலக்கு பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இதனால் வாகனங்களில் செல்வோர் அதிக வேகத்தில் செல்வதை தவிர்ப்பார்கள். குற்றச்செயல்களில் ஈடுபட அச்சப்பட்டனர். தற்போது இந்த போலீஸ் சோதனைச் சாவடி பயன்பாட்டில் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இந்தப்பகுதியில் டாஸ்மாக் கடை வேறு திறக்கப்பட்டுள்ளதால் எப்போதும் ரோட்டோரங்களில் மதுப்பிரியர்கள் தான் திருப்புல்லாணி வரும் பக்தர்களை வரவேற்கின்றனர். மது போதையில் தகராறு செய்வதற்கும், குற்றச்செயல்கள் நடப்பதற்கும் ஏதுவாக உள்ளது.
எனவே இங்கு போலீஸ் சோதனை சாவடியை மேம்படுத்தி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.----------