/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நயினார்கோவில் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்; பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி நயினார்கோவில் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்; பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி
நயினார்கோவில் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்; பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி
நயினார்கோவில் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்; பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி
நயினார்கோவில் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்; பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 10, 2024 11:21 PM
பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் ரோட்டில் மழை நீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
பரமக்குடியிலிருந்து 12 கி.மீ.,ல் நயினார்கோவில் உள்ளது. இங்கு சவுந்தர்யநாயகி, நாகநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கு நாள் முழுவதும் பஸ்கள் இயக்கப்படுகிறது. தொடர்ந்து ராமநாதபுரம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த வழியாக பஸ்கள் செல்கின்றன.
இந்நிலையில் நயினார்கோவில், காரடர்ந்தகுடி விலக்கு ரோடு மற்றும் நயினார் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. ரோடு பள்ளமான நிலையில் சிறிய மழைக்கும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் அருகில் உள்ள வீடுகள், கடைகளில் தண்ணீர் செல்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தொடர்ந்து டூவீலர், வாகன ஓட்டிகள் பள்ளங்களில் உள்ள தண்ணீரில் சிக்கி விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே போக்குவரத்து அதிகம் உள்ள நயினார்கோவில் பகுதியில் ரோட்டை சீரமைத்து மழை நீர் தேங்காமல் தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.