/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தால் மக்கள் அச்சம் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தால் மக்கள் அச்சம்
ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தால் மக்கள் அச்சம்
ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தால் மக்கள் அச்சம்
ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தால் மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 10, 2024 11:20 PM

கமுதி : முதுகுளத்துார் - -கமுதி ரோடு பேரையூர் கண்மாய் கரை அருகே பாலத்தின் இரும்பு தடுப்புவேலி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சமடைகின்றனர்.
கமுதி அருகே பேரையூர் கண்மாயில் தண்ணீர் தேக்கி வைத்து விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
கண்மாய் வரத்து கால்வாயை கடந்து செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கமுதி--முதுகுளத்துார் ரோட்டில் சிறுபாலம் அமைக்கப்பட்டது.
இப்பாலத்தின் பக்கவாட்டில் இரும்பு கம்பியால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் தடுப்பு வேலி மற்றும் பாலத்தை அவ்வப்போது பராமரித்து வந்தனர். தற்போது பாலத்தின் இரும்பு கம்பியான தடுப்புவேலி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பாலம் குறுகலாக இருப்பதால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டூவீலரில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் பாலத்தின் தடுப்பு வேலியை சீரமைக்க வேண்டும்.
காலப்போக்கில் நிரந்தரமாக பாலத்தில் இரும்பு தடுப்புவேலியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.