/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாயல்குடி சீர்மரபினர் அரசு பள்ளி மாணவர் விடுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை சாயல்குடி சீர்மரபினர் அரசு பள்ளி மாணவர் விடுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை
சாயல்குடி சீர்மரபினர் அரசு பள்ளி மாணவர் விடுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை
சாயல்குடி சீர்மரபினர் அரசு பள்ளி மாணவர் விடுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை
சாயல்குடி சீர்மரபினர் அரசு பள்ளி மாணவர் விடுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2024 11:20 PM

சாயல்குடி : சாயல்குடி அரசு சீர் மரபினர் மாணவர் விடுதி கட்டடம் சேதமடைந்தும் பெயின்ட் அடிக்காமல் பொலிவிழந்தும் காணப்படுவதால் முழுமையாக சீரமைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2004ல் அப்போதைய முதல்வர் ஜெ., ரூ.31.50 லட்சத்தில் சீர் மரபினர் மாணவர் விடுதியும், அதன் அருகே 2007ல் ரூ.40 லட்சத்தில் கூடுதல் விடுதி கட்டடம் கட்டப்பட்டது.
சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இங்குள்ள சீர்மரபினர் மாணவர் விடுதியில் தங்கி படித்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: சீர் மரபினர் மாணவர் விடுதியில் கட்டடங்கள் சேதமடைந்து பொலிவிழந்துள்ளது.
பெயின்ட் அடிக்காமல் பல இடங்களில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து வருகிறது. கான்கிரீட் பூச்சுகளும் செங்கற்களும் வெளியே தெரிகின்றன.
பள்ளிகள் திறக்கப் பட்டுள்ள நிலையில் மாணவர் விடுதியில் முறையாக பராமரிப்பு பணிகளை செய்யாமல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பன் துறை சார்ந்த இக்கட்டடம் எவ்வித பராமரிப்பின்றி பொழிவிழந்த நிலையில் உள்ளது.
இது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி மாணவர் விடுதியை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்றனர்.