/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதிய ரோட்டில் எச்சரிக்கை போர்டு வைக்க கோரிக்கை புதிய ரோட்டில் எச்சரிக்கை போர்டு வைக்க கோரிக்கை
புதிய ரோட்டில் எச்சரிக்கை போர்டு வைக்க கோரிக்கை
புதிய ரோட்டில் எச்சரிக்கை போர்டு வைக்க கோரிக்கை
புதிய ரோட்டில் எச்சரிக்கை போர்டு வைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2024 11:22 PM

முதுகுளத்துார் : முதுகுளத்துார்- - அபிராமம் ரோடு ஆற்றுப்பாலம் அருகே புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்ட நிலையில் ரோடு இரண்டாக பிரிக்கப்பட்டு நடுவில் கற்கள் கொட்டப்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை போர்டு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதுகுளத்துார்- பரமக்குடி ரோடு வேளாண்மை சேமிப்பு கிடங்கு துவங்கி கண்மாய் கரை, அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக நீதிமன்றம் வரை முதற்கட்டமாக ரோடு அமைக்கும் பணி நடைபெற்றது.
தற்போது வேளாண்மை சேமிப்பு கிடங்கில் இருந்து செல்வநாயகபுரம் ரோடு வரை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து நீதிமன்றம் வரை ரோடு அமைக்கும் பணி ஓரளவு நடந்து முடிந்துள்ளது.
முதுகுளத்துார் - - அபிராமம் ரோடு ஆற்றுப்பாலம் அருகே ரோடு இரண்டாக பிரிக்கப்பட்டு நடுவில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரோட்டில் எந்தவொரு எச்சரிக்கை போர்டு, பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் இல்லாததால் இரவு நேரத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ரோட்டில் விபத்து ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.