ADDED : ஜூன் 10, 2024 11:23 PM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்திய லாரியை தாசில்தார் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் தாசில்தார் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளர் கோபி கிருஷ்ணன் ஆகியோர் மணல் கடத்தல் தகவலின் பேரில் கேணிக்கரையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்திய லாரியை மறித்து சோதனை செய்தனர்.
இதில் எந்த அனுமதியும் இன்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்து கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். மணல் கடத்தல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.