/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரேஷன் பொருட்கள் புகார் தெரிவிக்க கியூ.ஆர்.கோடு வசதி: கலெக்டர் ஆய்வு ரேஷன் பொருட்கள் புகார் தெரிவிக்க கியூ.ஆர்.கோடு வசதி: கலெக்டர் ஆய்வு
ரேஷன் பொருட்கள் புகார் தெரிவிக்க கியூ.ஆர்.கோடு வசதி: கலெக்டர் ஆய்வு
ரேஷன் பொருட்கள் புகார் தெரிவிக்க கியூ.ஆர்.கோடு வசதி: கலெக்டர் ஆய்வு
ரேஷன் பொருட்கள் புகார் தெரிவிக்க கியூ.ஆர்.கோடு வசதி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 18, 2024 10:35 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் ரேஷன் கடையில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொருட்கள் மற்றும் மக்கள் குறைகளை தெரிவிக்க ஒட்டப்பட்டுள்ள கியூ. ஆர்.கோடு செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார்.கலெக்டர் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் பற்றிய குறைகளை எளிதாக தெரிவிக்க புவிசார் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கியூ. ஆர்.கோடு ஒட்டப்பட்டுள்ளது. இதனை ஸ்கேன் செய்து மக்கள் கருத்துக்களை பதிவிடலாம்.
இதன் மூலம் எங்கிருந்து இந்த குறைகள் பெறப்பட்டது என்பதை எளிதாக தெரிந்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு நேரடியாக சென்றடையும் எல்லா தகவல்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 'கால் யுவர் கலெக்டர்-' 8300175888 அலைபேசியை தொடர்பு கொள்ளலாம் என்றார்.