ADDED : ஜூலை 18, 2024 10:34 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரூரல் ஒர்க்கர்ஸ் டெவெலப்மென்ட் சொசைட்டி சார்பில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் குயவன்குடி நடுநிலைப்பள்ளி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் கும்பரம் தொடக்கப்பள்ளி, கடலாடி ஊராட்சி ஒன்றியம் புல்லந்தை தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
இதில் காமராஜர் வரலாறு குறித்த ஓவியம், கவிதை, பாடல் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு இனிப்பு, எழுதுப் பொருட்கள் வழங்கப்பட்டது.