பூத்துக் குலுங்கும் நாவல் மரங்கள்
பூத்துக் குலுங்கும் நாவல் மரங்கள்
பூத்துக் குலுங்கும் நாவல் மரங்கள்
ADDED : ஜூலை 25, 2024 04:07 AM
திருப்புல்லாணி: - திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு, குத்துக்கல்வலசை, பெரியபட்டினம், வண்ணாங்குண்டு, தோப்பு வலசை, தினைக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. தற்போது நாவல் மரங்களில் பூக்கள் பூத்து காய்த்து வருகிறது.
இப்பகுதியில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளதால் பழங்களை சேகரித்து வாளிகளில் ராமநாதபுரம், அரண்மனை, கேணிக்கரை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர்.
மருத்துவ குணம் கொண்ட நாவல் பழங்களை ஏராளமானோர் ஆர்வமுடன் விரும்பி வாங்கி செல்கின்றனர்.