ADDED : ஜூலை 25, 2024 04:07 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் துாரி, மேலச்சாக்குளம், ஏனாதி, முதுகுளத்துார் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி அருகே இரும்பு மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது.
கடந்த 7 நாட்களுக்கு முன்புபள்ளி அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இவ்வழியே செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே மக்கள், மாணவர்களின் நலன் கருதி ஆபத்தான இரும்பு மின்கம்பத்தை மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர்.